30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழக அரசு உத்தரவு.!

11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு 11 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. நெல்லை, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, தேனி , பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன்,விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக  தீபக் ஜேக்கப், விழுப்புரம் ஆட்சியராக பழனி ஆகியோர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவானா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோரையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை ஆட்சியர் சமீரன், சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகவும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன், நெல்லை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment