இன்றைய நாளின் (31.01.2023) ராசிபலன்கள்..!

மேஷம்:  இன்று நீங்கள் உங்களுடைய பொறுமையை இழக்க நேரிடலாம். இன்று பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமான நாளாக அமையாது.நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது.கண்கள் மற்றும் தொண்டை எரிச்சல்கள் ஏற்படலாம்.

ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திற்கும் பொறுமை ரொம்பவே அவசியம். உங்களுடைய வேலைகள் இரன்டு கடினமாக இருக்கும். தேவையில்லாமல் பணங்களை செலவு செய்யலாம்.

மிதுனம்: நீங்கள் இன்று மைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது மிகவும் நல்லது. உங்களுக்கு இன்று பணவரவு அதிகமாக காணப்படாது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கடகம்: இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் மேலதிகாரியிடமிருந்து பதவி உயர்வு என்ற பெயரில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

சிம்மம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் கடின முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் இன்று கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியாது.

கன்னி: இன்றயை நாள் உங்களுக்கு சுமாராக இருக்கும். ஏனென்றால், பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணத்தை குறைந்த அளவே செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

துலாம்: இன்று நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். நீங்கள் வேலைசெய்யும் இடத்தில மற்ற பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும். உங்களுக்கு இன்று பண இழப்புகள் ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் உங்களுடைய வேலைகள் அனைத்தையும் வெகுவிரைவில் முடித்து விடுவீர்கள் பணமும் அதிகம் செலவு செய்ய மாட்டீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு: இன்று உங்களுக்கு ஆபத்தான நாளாக அமையும். வேலைகள் அதிகமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இருக்காது. ஆடை ஆபரணம், ஆடம்பரப் பொருட்கள் போன்ற பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.

மகரம்: இன்று நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இன்று சோர்வுடன் காணப்படுவீர்கள். கூடுதல் சுமைகள் காரணமாக இன்று பணத்தை அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதில் தோன்றும் அமைதியற்ற உணர்வுகளின் காரணமாய் அசெகரியங்களை உணர்வீர்கள்.

கும்பம்: இன்று நீங்கள் வெற்றிகாண்பது என்பது கடினம்.பணவளர்ச்சி காண்பது கடினமாக இருக்கும். பணஇழப்புகள் ஏற்படலாம்.தொண்டையில் தொற்று ஏற்படலாம். வெந்நீர் குடிப்பதன் மூலம் நன்றாக உணரலாம்.

மீனம் : இன்று உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம் எனவே அதனை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் வெற்றி காண்பது கடினம்.தொண்டையில் தொற்று ஏற்படலாம். வெந்நீர் குடிப்பதன் மூலம் உபாதைகள் குறையலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment