இன்றைய ராசி பலன்கள்! உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும்.!

மாசி மாதம் 15 ஆம் தேதி[ பிப்ரவரி 27, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்றைய செயல்கள் சுமூகமாக நடக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். நீங்கள் உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். இன்று பணியில் வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். இன்று பணவரவு அதிகமாக காணப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு பொறுமை அவசியம் ,பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். பணியின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நட்பான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும், முடிந்த அளவிற்கு பிறருக்கு பண உதவி செய்வதன் மூலம் இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம்:

இன்றைய நாளில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டிய இருப்பதால் பொறுமை அவசியம். இன்று அதிகப்படியான பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் உறவில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். இன்று குறைந்த அளவு பணமே சம்பாதிக்க முடியும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தியானம் மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.

கடகம்:

இன்று உங்கள் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கான நாள், முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல் திறன் மூலம் உங்கள் திறமை வெளிப்படும் நாள். இன்று உங்கள் துணைஇடம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பண வரவு சிறப்பாக காணப்படும், ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

சிம்மம்:

இன்றைய நாள் சாதகமாக இருக்காது, பிறருடன் பேசும் போது யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று சக பணியாளர்களிடம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் .உங்கள் துணையுடன் நட்பான அணுகு முறையை கொள்வீர்கள். பண வரவு போதிய  அளவுக்கு இருக்காது. கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கன்னி:

இன்று பொறுமையை கையாள வேண்டும் உங்களுடன் பிறந்தவர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரம் பணியிட சூழல் சாதகமாக இருக்காது உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியாக இருக்க வேண்டும் பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க நீங்கள் சமயோகித புத்தியை பயன்படுத்த வேண்டும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.
நீங்கள் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும் .பணப்புழக்கம் குறைந்து காணப்படும் .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், சூடான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

உங்கள் முயற்சிகளில் வெற்றிக்காக  கடுமையாக உழைக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நன் மதிப்பை பெறுவீர்கள். உங்கள் பணிக்கான நல்ல மதிப்பும்  பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உறவில் மகிழ்ச்சி காணப்படும் .இன்று நிதி நிலையில் அதிர்ஷ்டம் காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

இன்று சிறப்பான நாள், புதிய முதலீடு லாபகரமாக இருக்கும் .கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள் .பணவரவு சிறப்பாக இருக்கும் .ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

மகரம்:

இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படாது. இன்றைய நாளை சமநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.  பணியில் சில அதிருப்தி காணப்படும். உங்கள் மேல் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் துணையுடனான உறவில் நல்இணக்கம் பாதிக்கப்படும் .பணப்புழக்கம் குறைவாக உள்ளது. உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும் .

கும்பம்:

இன்று மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்படும்.  பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் நட்பான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும் .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்:

இன்று நன்மையான பலன்கள் கிடைக்கும். இன்று எடுக்கும் முடிவுகளில் நல்ல பலனை பெற்றுத் தரும் .பணிகள் திருப்தியை அளிக்கும். உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம், உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள். இன்று சாதகமான நிதி நிலைமை காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Leave a Comment