Today’s live : ஆஸ்திரேலியாவை’ 200′ ரன்களுக்குள் முடக்கியது இந்திய அணி..!

ஆஸ்திரேலியாவை’ 200′ ரன்களுக்குள் முடக்கியது இந்திய அணி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35 வர்களில் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 81 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் மற்றும் ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 50 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

2023-03-17 05:20 PM

மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி.

2023-03-17 04:20 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இரயில் நிலையம், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த மருத்துவக்கல்லூரி மாணவரின் கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டானது. ரயில்வே காவல் துறையினர் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2023-03-17 04:10 PM

பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் – பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 24, ஏப்ரல் 10 மற்றும் 24-ல் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

2023-03-17 03:40 PM

அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதைப்போல புதுச்சேரியில் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2023-03-17 03:30 PM

சென்னை வேளச்சேரியில் ‘ஆலங்கட்டி மழை

சென்னை மாவட்டம் வேளச்சேரியில் இன்று (17.03.2023) ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கோடை வெயில் காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை  பெய்துள்ளது என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

2023-03-17 02:30 PM

சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டு விடுமுறை 

பெங்களூரில் உள்ள Wakefit என்ற கம்பெனி, அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து அந்த கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 17 ஆம் தேதி சர்வதேச தூக்க தினத்தை Wakefit அதன் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறையாகக்  வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-03-17 02:00 PM

வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்

பால்விற்பனை குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என ஆவின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

2023-03-17 02:00 PM

மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய சுகாதாரத்துறை

மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம். தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு திடீர் மாரடைப்பு ஏற்படுவது குறித்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

2023-03-17 01:40 PM

ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்

 ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தயார் பழனியம்மாள் கடந்த மாதம் 25ஆம் தேதி  உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சென்னை கிரீன்வே சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு  மதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். ஓபிஎஸ் தயார் மறைவுக்கு நேரில் சென்று தனது இரங்கலை ஓ.பன்னீர்செல்வத்திடம் மு.க.ஸ்டாலின் கூறினார்.

2023-03-17 01:10 PM

திருவண்ணாமலையில் பயங்கர விபத்து: 6 பேர் மரணம்

திருவண்ணாமலையில் இரு வேறு இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு. வெறையூரில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனம் மோதியதில் 3 பேர் பலி. அதுபோல திருவண்ணாமலை – செங்கம் சாலையில் சரக்கு லாரி, கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

2023-03-17 01:00 PM

கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு -தமிழ்நாடு அரசு

மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினத்தையொட்டி  அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023-03-17 12:30 PM

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் நாளை ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை உள்ளிட்ட  இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் நாளை ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023-03-17 12:00 PM

தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைது

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு தகராறு செய்ததாக சாத்தன்குளம் பாஜக நிர்வாகி பூபதி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

2023-03-17 11:50 AM

ராணுவ வீரர் மரணம் – முதலமைச்சர் இரங்கல்

அருணாசலப் பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தன்னுடைய இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2023-03-17 11:40 AM

சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரி; முதல்வர் இன்று திறந்து வைப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின், கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய பெவிலியனை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.இந்த திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கியமாக சி.எஸ்.கே அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

2023-03-17 11:30 AM

விரைவு ரயிலில் கட்டு கட்டாக பணம்

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் சோதனை செய்யும் போது ஒருவரிடம் 2.7 கிலோ தங்க நகைகள் மற்றும் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர்வரு வருமான வரித்துறை விசாரணையில் இருக்கிறார்.

2023-03-17 11:20 AM

கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 796 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

2023-03-17 11:00 AM

Leave a Comment