Today’s Live: ‘பாலியல் உறவு’ கடவுள் கொடுத்த அழகான பரிசு – போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் பேச்சு:

கடவுள் மனிதனுக்கு வழங்கிய மிக அழகான விஷயங்களில் ஒன்று பாலுறவு என்று போப் பிரான்சிஸ் ஒரு ஆவணப்படத்தில் பேசியுள்ளார். டிஸ்னி தயாரிப்பில் நேற்று வெளியான ‘தி போப் ஆன்சர்ஸ்’ நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். உங்களை பாலியல் ரீதியாக வெளிப்படுத்துவது வளமானது. எனவே, உண்மையான பாலியல் வெளிப்பாட்டிலிருந்து விலக்கும் விஷயங்கள், உங்களை குறைத்து விடுகிறது என்றார்.

6.04.2023 5.05 PM

காங்கிரசுக்கு 141 இடங்கள் உறுதி :

கர்நாடக தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக-வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் ஆட்சியைப் பிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் 141 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் டி. .கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க, 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

6.04.2023 5.05 PM

தேர்தல் குழு கூட்டம் :

கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் உள்ள ஏஐசிசி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

6.04.2023 4.00 PM

நாளை அவசர ஆலோசனை :

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

6.04.2023 3.35 PM

தீ விபத்து :

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாஸ்திரி நகரில் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

6.04.2023 2.15 PM

காயத்ரி ரகுராம் மீது புகார் :

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி, தொடர்ந்து அண்ணாமலை, அவரது ஆதரவாளர்களை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – அண்ணாமலை மீது அவதூறு..! காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக புகார்..! 

6.04.2023 1.50 PM

பழைய ரயில்களில் புதிய இன்ஜின் :

பழைய ரயில்களில் புதிய இன்ஜினைப் போட்டுவிட்டு நீண்ட பேச்சோடு கொடியேற்றுவதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை. ரயிலை தொடங்குவதற்கு, உங்களுக்கு என்ன தேவை, அதற்கு உள்ளூர் எம்.பி.க்கள் உள்ளனர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

6.04.2023 1.04 PM

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ்:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மார்ச் 15-ம் தேதி நெஞ்சக தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது. தற்போது, அவரது உடல்நிலை சீரடைந்திருப்பதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

6.04.2023 12.50 PM

மக்களவைக்கு பிரதமர் வருகை:

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற மக்களவைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால், எதிர் கட்சினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், தொடங்கிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6.04.2023 11.50 AM

அதிமுக அவரச செயற்குழு கூட்டம்:

வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி அன்று அதிமுக அவரச செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். அதாவது, ஏப்ரல் 7ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த செயற்குழு கூட்டம் ஏற்கனவே ரத்துசெய்யப்பட்ட நிலையில், தற்போது அவசர செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6.04.2023 10:50 AM

Leave a Comment