ஐஐடி களில் பாகுபாடு இருக்கக்கூடாது- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.!

ஐஐடி-க்களில் எந்தவித பாகுபாடும் இருக்கக்கூடாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஐஐடி கவுன்சில்:

இந்திய தொழில்நுட்பக்கழகங்கள் எனப்படும் ஐஐடி கல்லூரிகளில், தொடர்ந்து மாணவர்கள் உயிரிழந்து வருவது நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று நடைபெற்ற 55-வது ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார்.

மன அழுத்தம்:

அப்போது பேசிய அவர், ஐஐடி-க்களில் மாணவர்கள் எந்த வித பாகுபாடுகள் இன்றி, எந்த மன அழுத்தமும் இன்றி பயில வேண்டும். மன அழுத்தம் காரணமாக தான் மாணவர்கள் உயிரிழந்து வருகிறார்கள், இது வேதனை தரும் விஷயம் என்று அவர் கூறினார்.

தடுக்கவேண்டும்:

கடந்த 5 வருடங்களில் இந்தியாவின் பல்வேறு ஐஐடி கல்லூரிகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் சென்னை ஐஐடி-யில் 2பேரும், மும்பை ஐஐடி-யில் ஒருவரும் என உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கவேண்டும் என்று பேசிய மத்திய அமைச்சர், மாணவர்களின் மன அழுத்தம் குறைய அவர்களுக்கு தேவையான மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நடவடிக்கை:

மேலும், பேராசிரியர்களும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் வராமல் இருக்க அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 4500 ஐஐடி  மாணவர்கள் மன அழுத்தத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறி இருக்கின்றனர், இதனையும் தடுக்க வேண்டும் இதற்காக புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பாக அவர்களின் தாய்மொழியிலேயே படிக்க ஐஐடி-க்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment