ஆளுநர் என்ற பொறுப்பே தேவையில்லை – விசிக

பாஜக, ஆர்எஸ்எஸ்-யின் ஊதுகுழலாக ஆளுநர் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என விசிகாவின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேச்சு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் அதாவது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பேரவையில் உரையாற்றிய போது, திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமில்லாமல், மிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகளை தவிர்த்து விட்டார் எனவும் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தபின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிகாவின் சட்டமன்றக்குழு தலைவர் சிந்தனைச்செல்வன், ஆளுநர் என்ற பொறுப்பே தேவையில்லை, பாஜகவின் கொள்கைகளை தமிழ்நாட்டின் நடைமுறைப்படுத்த ஆளுநர் விரும்புகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ்-யின் ஊதுகுழலாக ஆளுநர் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment