அதிரடியாக சரிந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதாவது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர்ந்து இன்று வரை தங்கம் விலை சரிந்து வருகிறது.

சென்னையில் இன்று (09. 01. 2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,820க்கும்  விற்பனையாகிறது. அதே போல்,வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய், 80 காசுகளுக்கும்,1 கிலோ 77,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அரசு பேருந்துகள் இயக்கம்…மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!

சென்னையில் நேற்று (08. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830க்கும் விற்பனையானது. அதே போ, வெள்ளி விலை ரூ.1.80 காசுகள் குறைந்து, கிராமூக்கு ரூ.77.80க்கும், கிலோ ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.