தொடரும் ஐடி ரெய்டு… 2வது நாளாக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர்.! 

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீதான வரி எய்ப்பு  புகாரின் அடிப்படையில் அமைச்சரின் வீடு, அலுவலகம் , அமைச்சரின் உறவினர் வீடு அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த வருமான வரித்துறை சோதனையானது நேற்று காலை 7 முதல் துவங்கியது. சென்னையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அருணை கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், அறக்கட்டளைகள் என சோதனை நீண்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? – சு.வெங்கடேசன் எம்.பி

அமைச்சர் மகன் கபிலன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நேற்று காலை முதல் தொடங்கியது. நேற்று துவங்கிய இந்த வருமானவரித்துறை சோதனையானது இன்று 2வது நாளிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வருகிறது.

நேற்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை இன்று 20 இடங்களில் தொடர்கிறது. திருவண்ணாமலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் இன்றும் வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்படுகிறது. உறுதியான தகவலை வருமான வரித்துறையினர் சோதனை விவரங்கள் நிறைவு பெற்றதும் அதிகாரபூர்வமாக அறிவிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.