HBDVadivelu : மீம்ஸ் கிரியேட்டர்களின் குலதெய்வம்! வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் இன்று!

நடிகர் வடிவேலு இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1980,90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் ஜொலித்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சமயம் வடிவேலு என் தங்கை கல்யாணி என்னும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திற்கு பிறகு என் ‘ராசாவின் மனசிலே’  திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது . அதன் பிறகு ஆத்தா உன் கோவிலிலே , சின்ன கவுண்டர்,  இளவரசன், அரண்மனைக்கிளி, வள்ளி, கிழக்கு சீமையிலே, ரோஜாவே கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.

அந்த சமயம் ஜாம்பவான்கள்  முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த நிலையில் அவர்களுக்கு மத்தியில் வடிவேலுவும் தனக்கென்று ஒரு உடல் பாவனையை மாற்றிக் கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிட்டத்தட்ட 1998 காலகட்டத்திலேயே 100 திரைப்படங்களுக்கு மேல் அவர் நடித்து விட்டார் அந்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

அதன்பிறகு,  2000 காலகட்டத்தில் இருந்து அவருடைய கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு பெயர் பெற்றது அதேபோல அவர் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அவர் தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்கள் பெரிய அளவில் காமெடியாக பேசப்பட்டது. அந்த அளவிற்கு வித்தியாச வித்தியாசமான  பெயர்களை வைத்து வடிவேலு பிரபலமானார்.

பின், சில ஆண்டுகளாக அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை மீம்ஸ் மூலம் இன்னும் பிரபலம் ஆக்கினார்கள் என்றே கூறலாம். வடிவேலு தான் நடிக்கும் படங்களில் கொடுக்கும் செய்கைகள் அனைத்தும் கொரோனா காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.  பிறகு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கம்பை கொடுத்திருந்தார்.

அந்த திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை, அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது அந்த படத்தின் கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்த மகத்தான கலைஞன் வடிவேலுக்கு திரைபிரபலன்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .