தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் அழைப்பிதழில் தவிர்த்த ஆளுநர்!

ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு எனும் வார்த்தை மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் சின்னமும் இடம்பெறவில்லை.

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்துள்ளார் ஆளுநர் ஆர்என் ரவி. அதாவது, 2023-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 12-ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு தமிழக ஆளுநர் அழைப்பு விடுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னமும் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்தார் ஆளுநர். முந்தைய அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்தது.

இம்முறை அழைப்பிதழில் 3 இடங்களிலும் இந்திய அரசின் இலச்சினை மட்டுமே உள்ளது. நேற்று சட்டப்பேரவையில், அரசு தயாரித்த ஆளுநர் உரையில், தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தத்துக்கு பல்வேறு கண்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மீண்டும் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு, சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர் ஆளுநரை மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment