நீர்வள ஆதாரங்களை பாதுகாக்க 7 பொறியாளர்கள்..!குழுவை நியமித்து உத்தரவு

நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழக அமைப்பு கடந்த 2018 ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கழகத்திற்குநிரந்தர தலைவராக சத்யகோபால் கடந்தாண்டு செப்., மாதத்தில் அரசால் நியமிக்கப்பட்டார்து.

இக்கழகத்துக்கு 3 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர் என்று நியமிக்க கடந்த பிப்.,மாதம் அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் அப்பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை.

இந்நிலையில் அனைத்து பணிகளிலும் தேக்கம் காணப்பட்டது.நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கமிட்டி சார்பில் 3 தலைமை பொறியாளர், 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர் பணியிடம் ஆகியவைகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி  நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்துக்கு தலைமை பொறியாளர்களாராக பக்தவச்சலம், பத்மநாபன், செல்வராஜ், கண்காணிப்பு பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், மன்மதன், செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.