இன்று முதல் 40 நாட்கள்… கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.இதனை முன்னிட்டு,நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதே சமயம்,சாம்பல் புதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்ற நிலையில்,இதில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் கொண்டு சிலுவை குறியிட்டு பூசினர்.

பொதுவாக,இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்து எழுந்த நாள் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது.இதற்கு முன்னர் உள்ள 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது.அந்த வகையில், ஆண்டுதோறும் சாம்பல் புதன் தொடங்கி ஈஸ்டர் வரை கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.இந்த தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.