வீதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.! உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு.!

தெருநாய்களின் எண்ணிக்கையை சரிபார்க்க புதிய விதிகளை அமல்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

புது டெல்லி: சமீபத்தில் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட விலங்குகள் நல சட்ட விதிகளின் படி, தெருநாய் வளருப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல நிறுவனங்கள் மட்டுமே தெருநாய்களை பராமரிப்பதை நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கால்நடை பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) திட்டம் மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு திட்டத்தை மாநகராட்சிகள் கூட்டாக செயல்படுத்த வேண்டும் என மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023 ஆனது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு விதித்த புதிய விதிகளின்படி, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்கான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) திட்டம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விதிகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலம், விலங்கு நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment