ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணை.!!

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணை.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.  ஏற்கனவே. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றது.

அதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் ,கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிட தனக்கு தகுதியுள்ள நிலையில், தன்னை நீக்கிவிட்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என தனிநீதிபதியின் தீர்ப்பு தவறு என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரணை நடத்துகின்றனர்.

மேலும், நேற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment