தொடர்ந்து தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு முதலிடம்!

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.  கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6-வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதன்படி, இந்த மாதம் 31ம் தேதி வரை தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நான்காவது நாளான நேற்று நடைபெற்ற சைக்கிளிங் விளையாட்டில் மகளிர் தனி பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீமதி தங்கம் வென்றார். அதே போல், தன்யதா ஜேபி, ஸ்ரீமதி
ஆர். தமிழரசி, எம். பூஜா ஸ்வேதா ஆகியோர் சைக்கிளிங் விளையாட்டில் மகளிருக்கான குழு பிரிவில், தங்கம் வென்று அசத்தினர்.

இன்று போட்டிகள் அணைத்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று மட்டும் இரண்டு தங்கம் பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழ்நாடு முதலிடம் உள்ளது. அதன்படி, 6 தங்க பதக்கத்தையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளது.

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அடுத்தபடியாக, மகாராஷ்டிரா மாநிலம் 4 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்த 21 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹரியானா மாநிலம் 4 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும், 8 வெண்கல பதக்கம் என மொத்தம் 16 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.