கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை கிடுக்குபிடி உத்தரவு.!

தமிழகத்தில் செயல்படும் கருத்தரிப்பு மையங்கள் கருமுட்டை சேமிப்புக்கு 50,000 ரூபாயும், கருமுட்டையை செலுத்த 50,000 ரூபாயும், வாடகை தாய் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் செயல்படும் போலியான கருத்தரிப்பு மையங்களை கண்டறிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய பதிவு கட்டணங்களை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அரசுக்கு பதிவு கட்டணம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கருமுட்டை சேமிப்புக்கு 50,000 ரூபாயும், கருமுட்டையை செலுத்த 50,000 ரூபாயும், வாடகை தாய் பதிவு கட்டணமாக 2 லட்சம் ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்த தமிழக சுகாதாரத்துறை செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு  உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment