2 நாள் லீவ் வேணும்… வங்கதேசத்திற்க்குள் ஊடுருவ முயன்ற தாம்பரம் SSI போலீஸ்.! 

Selaiyur SSI : வங்கதேசத்தில் ஊடுருவ முயன்றதாக தாம்பரம், சேலையூர் சிறப்பு SI அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் காவல்நிலைய சிறப்பு துணை காவல் ஆய்வாளர் (SSI) ஜான் செல்வராஜ், இன்று வங்கதேச நாட்டு எல்லையில் ஊடுருவ முயன்றதாக அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலையூர் காவல்நிலைய SSI ஆக பணியாற்றி வந்த ஜான் செல்வராஜ், கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர் அடிக்கடி விடுமுறை எடுக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே அதிக விடுப்பு காரணமாக ஒருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார் என கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருந்த ஜான் செல்வராஜ் , கூடுதலாக 2 நாட்கள் மருத்துவ விடுப்புக்கும் விண்ணப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது ஜான் செல்வராஜ், சட்டவிரோதமாக இந்திய எல்லையை கடந்து வங்கதேச எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், ஜான் செல்வராஜுக்கு சர்வதேச சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் வங்கதேச ராணுவம் தொடர் விசாரணை செய்து வருகிறது. ஜான் துரைராஜ் சமீபத்தில் கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு மாற்றபடுவதற்கு ஆணை பெற்றுள்ளார் என்றும் இன்னும் பணிமாறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.