சஞ்சு சாம்சன் சதம் வீண்! வார்னர் விஜய்சங்கர் அதிரடி… ஹைதராபாத் வெற்றி!

  •  ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 20 ஓவர்களின் முடிவில் சதம் அடிக்க அந்த அணி மொத்தம் 198 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்காக துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த விஜய் சங்கர் 15 பந்துகளுக்கு 35 ரன்கள் அடிக்க அந்த அணி 19 ஓவரில் 201 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கைத் முடித்தது.

Leave a Comment