அம்பேத்கரின் படத்தை நீதிமன்றங்களில் நீக்கவேண்டுமா? ஏற்கமுடியாது; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிக்கை.!

சட்டமேதை அம்பேத்கரின் படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்பதை ஏற்கமுடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிக்கை.

தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களிலும் திருவள்ளுவர் ,காந்தி படங்களை தவிர மற்ற தலைவர்கள் படங்கள் இடம்பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது குறித்து, இதனை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

bedkar court2
bedkar court2 [Image -Twitter/@aunnews]

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, சட்டத்தை உருவாக்க அரும்பாடு பட்ட அம்பேத்கரின் படம் நீதிமன்றத்தில் வைக்க அனுமதி இல்லையா? அம்பேத்கர் தயாரித்து கொடுத்த, அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார்கள், அம்பேத்கர் படம் நீதிமன்றத்தில் வைத்தால் அகற்றப்படும் என்ற அறிக்கையை திரும்பபெறவேண்டும்.

bedkar court2
bedkar court2 [Image -Twitter/@aunnews]

உயரிதிமன்றத்தின் இந்த அறிக்கையை ஏற்கமுடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.