தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம் செய்து உத்தரவு!

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக 1989-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, ஏடிஜிபிக்கள் தாமரை கண்ணன், ஆர்.பிரியா குமார், டாக்டர் கே.திருமலைமுத்து, டாக்டர் எம்.செல்வராஜ் ஆகியோர் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில  பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, தமிழக அரசின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு அரசு நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல் மீதான மேல்முறையீடு, தகவல் புகார்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதற்கான பதில்கள் குறித்து மாநிலத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளிடமிருந்து ஆணையம் ஆண்டு அறிக்கையைப் பெற உதவுகிறது.

இந்த சமயத்தில், தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிந்தது. அதேபோல், தகவல் ஆணையர்களாக இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.