செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிர்ப்பு.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்..!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்து எட்டு மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார்.

இவரின் ராஜினாமாகடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில் நேற்று செந்தில் பாலாஜி  ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் தனது வாதங்களை முன் வைத்தார்.

மக்களவை தேர்தல்: விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – திமுக அறிவிப்பு

பின்னர்அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை (அதாவது இன்று ) பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி  ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. மறுபுறம் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment