கவுண்டமணி வசனத்தை தட்டித்தூக்கிய சந்தானம்.! அடுத்த தரமான சம்பவம் வெகு விரைவில்….

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்ததாக ‘கிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கூட நேற்று முன்தினம் வெளியானது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு டிக்கிலோனா படத்தை இயக்கி இருந்தார்.

டிக்கிலோனா படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சந்தானம் – கார்த்திக் யோகி கூட்டணி இணைந்துள்ளது. படத்திற்கு கவுண்டமணி பேசிய மிகவும் பிரபலமான வசனம் “வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். விரைவில் படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்ற விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment