2,000க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னால் ரஷ்யா! உக்ரைன் குற்றச்சாட்டு.!

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த 2,000 சைபர் தாக்குதல்களின் பின்னால் ரஷ்யா இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உக்ரைனில் நடந்த 2,000க்கும் அதிகமான சைபர் தாக்குதல்களின்(ஹேக்கிங்) பின்னால் ரஷ்யா இருப்பதாக உக்ரேனிய அதிகாரி யூரி ஷிஹோல், குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன், கடந்த 2022 இல் 2,194 சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசாங்க நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு 557 முறை சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு 1,655 முறை சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக யூரி கூறினார். உக்ரைன் அதிகாரியான யூரி, ஸ்கைகோல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷ்ய ஹேக்கர்ஸ் காரணமாக அவரது நேரடி ஒளிபரப்பு மாநாடு, 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று மேலும் கூறினார், ஆனால் அதற்கான ஆதாரங்களை எதுவும் அவர் முன்வைக்கவில்லை.

அவர் கூறும்போது அந்த ஹேக்கர்கள், தங்களது அடையாளங்களை மறைப்பதில்லை, அவர்கள் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் நிதியுதவி பெற்றவர்கள், மற்றும் அந்த நிறுவனங்களில் அவர்களுக்காக வேலை செய்கிறார்கள் என்று மேலும் குற்றம் சாட்டினார்.

Leave a Comment