ஓடிடிதான் எதிர்காலம் -இயக்குனர் மணிரத்னம்.!

ஓடிடிதான் எதிர்காலம் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது  பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், ஜெயேந்திர பஞ்சாபகேசனுடன் இனைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர்.

9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடரைகவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

மேலும் இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, யோகி பாபு, அசோக் செல்வன் பிரகாஷ் ராஜ், , நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஓடிடி வளர்ச்சி பற்றிப் இயக்குனர் மணிரத்பேசியிருக்கும் மணிரத்னம், பேசியது “. இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளம் ஓடிடிதான். ஓடிடிதான் எதிர்காலம் நன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது. இரண்டு மணி நேரத் திரைப்பட வடிவத்துக்குப் பொருந்தாத பல சிந்தனைகள் உள்ளன. ஓடிடி சிறிது , பெரிது என எல்லாவகையான கதைகளையும் சொல்ல  வழிவகுத்துள்ளது. நீண்ட நேரம் ஓடக்கூடிய ஆந்தாலஜி படங்களை  எடுக்கலாம். இதனால் மாறுபட்ட கதைகள் மட்டுமல்ல, இயக்குநர்கள் படத்தை இயக்கும் விதத்திலும் மாறுதல்கள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.