தடைகளை உடைத்து வெளியான ‘ருத்ரன்’…எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ.!

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ளார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Rudhran From Today
Rudhran From Today

இந்த திரைப்படம் இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். அந்த வகையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் டிவிட்டரில்  ” படத்தின் முதல் பாதி அருமை. இரண்டாவது பாதி மிகவும் அருமை பகை முடி பாடல் சூப்பர்” என பதிவிட்டுள்ளார்.


படத்தை பார்த்த மற்றோருவர் ” ருத்ரன் படம் அருமை. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” ருத்ரன் விமர்சனம் : நல்ல டெம்ப்ளேட் கதை சரியான நடிகர்கள் தேர்வு சாம் சி எஸ் பின்னணி இசை படத்திற்கு முதுகெலும்பு . 1- வது பாதியில் லேக் தேவையற்ற பாடல்கள் 2-வது பாதி சரி பகை முடி பாடலுடன் கூடிய கிளைமாக்ஸ் காட்சி திரைக்கதையில் இன்னும் சிறப்பாக உணர்ச்சிகரமான காட்சிகள் இருந்திருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” ருத்ரன் படம் ஆக்‌ஷன்-பேக் படம்.  பிடிவாதமான கதைக்களம் மற்றும் பவர் பேக் செய்யப்பட்ட நடிப்புடன், இந்தத் திரைப்படம் உங்களை உங்கள் இருக்கைகளின் நுனியில் வைத்திருப்பதாக உறுதியளிக்கிறது. தவறவிடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் வடஇந்திய மொழிகளின் டப்பிங் உரிமைக்காக எழுந்த பிரச்சனையால், ரெவன்ஸா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ருத்ரன் படத்தை வெளியிட 24 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திரைப்படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. தடைகளை தாண்டி வெளியான ருத்ரன் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment