ஆட்கொணர்வு மனு: இறுதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கும் – 3வது நீதிபதி

நீதிபதி பரத சக்கரவர்த்தி கருத்துடன் உடன்படுவதாக கூறிய நீதிபதி கார்த்திகேயன் தனது கருத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்க்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயார்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. ஏற்கனவே, செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றது. அனைத்து வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இத்தொடர்பாக மூன்றாவது நீதிபதி கூறுகையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம்.கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு தடை கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். கைது காரணங்களை பெற மறுத்து விட்டு, தரவில்லை என முன்வைத்த வாதம் நிராகரிக்கப்படுகிறது. கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றால் காவலில் எடுத்து விசாரிப்பதும் அனுமதிக்கத்தக்கது

முதல் 15 நாட்களுக்கு பிறகு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜி கைதும், நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானது. செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுகிறேன். இதன் மூலம் நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பை, 3வது நீதிபதி கார்த்திகேயன் உறுதி செய்தார். இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு வழங்கும். நீதிபத்தில் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வுக்கு மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.

இரு நீதிபதிகள் முரண்பட்டதால் தனது கருத்தை தெரிவித்து தலைமை நீதிபதிக்கு வழக்கை அனுப்பினார் நீதிபதி கார்த்திகேயன். பரத சக்கரவர்த்தி கருத்துடன் உடன்படுவதாக கூறிய நீதிபதி கார்த்திகேயன் தனது கருத்தை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதனால் 3வது நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்த கருத்துக்கள் 2 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்படும். 3வது நீதிபதி தீர்ப்பு வழங்க இயலாது, எது சரியானது என்பதை மட்டுமே முடிவு செய்ய இயலும் என கூறினார்.