ஆட்கொணர்வு மனு – இன்று விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை என அறிவிப்பு.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு.

இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக நீதிபதி நிஷா பானுவிடம் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ முறையிட்டதை அடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கமாக பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து முடித்த பிறகு ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை ரத்து செய்யகோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி. நீதிமனற்ற காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல என நீதிபதி தெரிவித்து தள்ளுபடி செய்தார். செந்தில் பாலாஜிக்கு வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.