ஜாபர் சாதிக் விவகாரம்: விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் – சர்ச்சைக்கு அமீர் விளக்கம்.!

Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது.

READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் அளித்துள்ளார். அப்படி இருந்தும் தொடர்ந்து அவரை ஜாபர் சாதிக் உடன் தொடர்புபடுத்தி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர்.

READ MORE – வாய்ப்பு கேட்டு பாக்யராஜ் கிட்ட போனேன்…அவர் அப்படி சொல்லிட்டாரு…நடிகை ஆர்த்தி வேதனை!

அதாவது, நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ம ஜாபர் சாதிக் உடன்கை’ மற்றும் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் தான் ஜாபர் சாதிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாபர் சாதிக்கின் சகோதரர் மைதீன் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களிலும், இணயத்தளத்தின் தன்னை பற்றி தவறாக தொடர்புபடுத்தி செய்தி வெளியாகி வருவதாக இயக்குனர் அமீர் மீண்டும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இதுதொடர்பாக பேசிய அமீர், போதைப்பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. அவர் என்னுடைய ஒரு படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே. அதைத்தாண்டி வேறு எந்த தொடர்பும் இருவருக்கும் இல்லை.

இது தொடர்பாக நான் விளக்கமளித்தும் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது மன உளைச்சலை தருகிறது. என்‌மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment