வாய்ப்பு கேட்டு பாக்யராஜ் கிட்ட போனேன்…அவர் அப்படி சொல்லிட்டாரு…நடிகை ஆர்த்தி வேதனை!

Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர்.

read more- இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

ஆனால், தொடர்ச்சியாக அவருக்கு படங்களில் காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால் அந்த படங்களிலே தொடர்ச்சியாக நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தி தனது சிறிய வயதிலேயே நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குனர் பாக்யராஜிடம் சென்ற தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! 

இது குறித்து பேசிய ஆர்த்தி ” நான் 12 வகுப்பு படித்து முடித்த பிறகு ஹீரோயினாக வேண்டும் என்று சினிமாவில் எனக்கு ஆர்வம் வந்தது. எனவே என்னுடைய உடல் எடையை எல்லாம் கடினமாக உழைத்து சாப்பிடாமல் இருந்து உடம்பை குறைத்து சற்று அழகாக இயக்குனர் பாக்யராஜ் ஜிடம் சென்றேன். சென்றுவிட்டு நான் 12 முடித்திருக்கிறேன் எனக்கு பட வாய்ப்புகள் கொடுங்கள் என்று கேட்டேன்.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

அதற்கு பாக்யராஜ் சார் உனக்கு இன்னும் வயது இருக்கிறது.  முதலில் படித்து முடி படித்து முடித்த பிறகு உனக்கு பட வாய்ப்புகள் வரும் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று அட்வைஸ் செய்தார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது அவர் அப்படி சொன்னது சற்று வேதனையாக இருந்தது. இருப்பினும் அவர் நல்லதுக்கு தான் சொன்னார் என்பதை புரிந்துகொண்டேன்” எனவும் நடிகை ஆர்த்தி தெரிவித்தள்ளார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மேலும், ஆர்த்தி தனது சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment