இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

Dhanush : நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம்.

read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! 

அதன்படி, இனிமேல் தனுஷ் தான் நடிக்கும் படங்களுக்கு 50 கோடி சம்பளம் வாங்கலாம் என தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். தனுஷ் அடுத்ததாக தனது 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

அந்த திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரண் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. படத்தை இயக்குவதால் அருண் மாதேஸ்வரண்  இளையராஜாவுடன் இருந்து அவர் எதிர்கொண்ட சம்பவங்களை பற்றியும் தகவலை சேகரித்து இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் சம்பளமாக 50 கோடி கேட்டுள்ளாராம். அது மட்டுமின்றி இனிமேல் அவர் தான் நடிக்கும் படங்களும் அவ்வளவு கோடி சம்பளம் தான் வாங்க முடிவு செய்து இருக்கிறாராம். தனுஷ் 50 கோடி சம்பளம் கேட்டுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தனுஷ் தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment