#RainAlert:தமிழகத்தில் இன்று கனமழை;50 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி,நாமக்கல், கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இலட்சதீவு,கேரளா மற்றும்அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment