#Storm Warning : 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Comment