பெங்களூர் – மைசூர் புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

பெங்களூரு-மைசூரு இடையேயான 118கிமீ தொலைவிலான புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி, இன்று திறந்து வைத்தார்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் வரை 118 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.8,480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நெடுஞ்சாலை பாரத் மாலா பிரயோஜன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில், பயண நேரம் குறைவாகும் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரதமர் மோடி, இந்த புதிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது, மேலும் கர்நாடகாவின் இரு முக்கிய நகரங்களான பெங்களூரு மற்றும் மைசூர், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் என இரண்டிற்கும் சிறப்புத்துவம் வாய்ந்ததாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Pm

Leave a Comment