பரபரப்பு..! இம்ரான் கான் வீட்டை அடித்து நொறுக்கி அதிரடியாக உள்ளே நுழைந்த போலீஸார்…

இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் வீட்டில் இருந்தபோது, போலீசார் தடுப்புகளை அகற்றிவிட்டு அவரது வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கில், நெற்று  ஆஜராக சென்று கொண்டிருந்த போது, போலீசார் இம்ரான் கான் வீட்டின் கதவை அடித்து நொறுக்கி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து, இம்ரான்கானை கைது செய்வதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டு இருக்கும்பொழுது, போலீசாருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், இம்ரான் கானின் மனைவி வீட்டில் இருந்தபோது, போலீசார் தடுப்புகளை அகற்றிவிட்டு அவரது வீட்டிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, போலீசார் ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், குறைந்தது 10 பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், போலீஸ் மறியல் போராட்டத்திற்கு தீ வைத்ததாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்ரான் கானின் கைது மீண்டும் தள்ளிப்போகிறது.

Leave a Comment