பாமக என்றால் ஜாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது – அன்புமணி ராமதாஸ்

பாமக என்றால் ஜாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

முதல் நாள் கையெழுத்து:

பாமக என்றால் ஜாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆணின் வெற்றிக்கு பின் பெண் உள்ளதாக கூறுவது சுயநலம், இருவரின் வெற்றிக்கு பின்னால் இருவரும் இருக்க வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் கையெழுத்து, பூரண மதுவிலக்குதான். நான் ஆட்சியில் இருந்திருந்தால் 162-ஆவது பிரிவு மூலம் ஆன்லைன் சூதாட்டதை தடை செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இதனிடையே,  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

பாமக குரல்:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது. வணிகவரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது.

சமூக அநீதி:

வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி. வணிகவரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

பதவி உயர்வு:

இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு வணி கவரித்துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வணிகவரித்துறையில் 120-க்கும் உதவி ஆணையர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment