அசத்தலான நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்.!!

நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது, தனது  தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது  சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தனது இன்டஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலாவிற்கு சென்று நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.