கஞ்சா குறித்து 10581 என்ற எண்ணிற்கு மக்கள் புகாரளிக்கலாம் – காவல்துறை

கஞ்சா தொடர்பாக மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் இலவச எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு.

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டம் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி நிலையங்கள் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, கஞ்சா விற்பனை தொடர்பாக புகாரளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், கஞ்சா தொடர்பாக மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் இலவச எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10581 அல்லது 9498410581 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோரின் விவரம் ரகசியமாக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment