சசிகலாவுக்கான அபராதத்தை கைவிட முடியாது – வருமான வரித்துறை

சசிகலாவுக்கு எதிரான வழக்கில் அபராதத்தை கைவிட முடியாது என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 1994-95ஆம் ஆண்டுக்கான வாரியாக ரூ.45 லட்சம் செலுத்த கடந்த 2002ஆம் ஆண்டு சசிகலாவுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டியிருந்தது.

ஒரு கோடிக்கும் குறைவான தொகை என்பதால் வருமான வரிதுறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வரி செலுத்தும் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து ,வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தியிருந்தது.

இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் சசிகலாவுக்கான அபராதத்தை ரத்து செய்ய முடியாது என்று வருமான வரித்துறை தரப்பில் பதில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.