#BREAKING: பீகாரில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்..!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்தது. இந்த கணக்கெடுப்புக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன்படி, பீகாரில் உள்ள 13.07 கோடி மக்கள் தொகையில் 2.02 கோடி பேர் பொது பிரிவினர் என்றும், 3.54 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 4.70 கோடி பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், 2.56 கோடி பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் ஓபிசி பிரிவினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடானது 43 சதவீதமாகவும், எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 16 சதவீத இடஒதுக்கீடு 20 சதவீதமாகவும், பழகுடியினருக்கு வழங்கப்பட்டு வந்த 1 சதவீத இடஒதுக்கீடு 2 சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 65%  ஆக உயர்த்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதம் மேல் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தில் 50 சதவீதம் மட்டுமே உள்இடஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், பீகார் மாநிலத்தில் தற்போது முதல்வர் அறிவித்துள்ள இடஒதுக்கீடு 65 சதவீதமாக மாறிவிட்டது. இதற்கு முன் மகாராஷ்டிரா அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வரம்பை மீறி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தால் அது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.