Aan Paavam : இளையராஜா வீட்டு வாசலில் உட்கார்ந்த பாண்டியராஜன்! ஆண்பாவம் படம் உருவான கதை!

1980 காலகட்டத்தில் எல்லாம் வெளியாகும் பல படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியானது. அந்த சமயம் தொடர்ச்சியாக பல பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து கொடுத்தார். அவருடைய இசை தங்களுடைய படத்திற்கு வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இளையராஜாவின் ஸ்டூடியோவிலே காத்திருப்பதை பல பிரபலங்கள் பேசி பார்த்திருப்பீர்கள்.

பலரும் இளையராஜாவின் ஸ்டுடியோவில் தான் அவருக்காக காத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இயக்குனர் பாண்டியராஜன் தன்னுடய படத்திற்கு இளையராஜா இசை தான் வேண்டும் என முடிவெடுத்து அவருடைய வீட்டு வாசலிலே அமர்ந்திருந்தாராம். இயக்கம் மீது அதிகம் ஆர்வம் கொண்ட பாண்டியராஜன் கடந்த 1959 -ஆம் ஆண்டு வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

இந்த படத்தை இயக்கி நடிப்பதற்கு முன்பு பாண்டியராஜன் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார். ஆனால், நடிகராக பாண்டியராஜன் ஆண்பாவம் படத்தில் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தை பாண்டியராஜன் தொடங்குவதற்கு முன்பு இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் தான் நான் படத்தை தொடங்குவேன் என்று முடிவில் இருந்தாராம்.

அந்த சமயம் தொடர்ச்சியாக பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துக்கொடுத்து மிகவும் பிஸியாக இருந்தார். எனவே நம்மளுடைய படத்திற்கு அவர் எப்படி இசையமைத்து கொடுப்பார் என்று பாண்டியராஜன் யோசித்து கொண்டே இருந்து இளையராஜாவின் வீட்டி வாசலிலே சோகமாக உட்கார்ந்து இருந்தாராம். பிறகு பாண்டியராஜனை பார்த்த இளையராஜா தன்னுடைய உதவியாளரிடம் இது யார் யா இங்கே உட்கார்ந்து இருக்கிறார் என கேட்டுள்ளாராம்.

அதற்கு உதவியாளர் இளையராஜாவிடம் சார் அவர் பாக்கியராஜின் உதவி இயக்குனர் படம் செய்ய போகிறாராம் அதன் நீங்கள் இசையமைத்து கொடுப்பீர்களா என கேட்டு வந்துள்ளார் என்று கூறியுள்ளார். உடனடியாக இளையராஜா பாண்டியராஜனை உள்ளே அழைத்து படத்தின் கதை என்ன என்று கேட்டுள்ளார்.

பிறகு பாண்டியராஜன் இளையராஜாவிடம் கதையை கூற கதையை கேட்டு விட்டு இளையராஜாவுக்கு பிடித்து போக உடனே இசையமைத்து கொடுக்கிறேன் என கூறிவிட்டாராம். அதன் பின் , இந்த படத்திற்காக இளையராஜா  “ஒட்டி வந்த சிங்க குட்டி”, “என்ன பாட சொல்லாதே”, “காதல் கசக்குதையா” உள்ளிட்ட பாடல்களை இசையமைத்து கொடுத்தாராம். அதன் பிறகு தான் பாண்டியராஜன்  படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

அப்போதே அவருடைய மனதில் நாம் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அந்த படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது. படத்தில் நடித்த ரேவதி, சீதை, வி.கே.ராமசாமி, மீசை முருகேசன், பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றது போலவே நடித்திருந்தார்கள்.

தரமான காமெடி மற்றும் காதல் செண்டிமெண்ட் கொண்ட படமாக உருவாக்கி இருந்த பாண்டியராஜனுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமும் , இந்த படம் உருவாகவும் காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.