ஓபிஎஸ் மேல்முறையீடு மனு; இறுதி விசாரணைக்கு தயார் அனைத்து தரப்பும் ஒப்புதல்.!

ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் இறுதி விசாரணைக்கு அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்க, அனைத்து தரப்புக்கும்  சம்மதமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என்றும், என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டுமே எப்படி சரியாகும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் தலைமையிலான அமர்வில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், இறுதி விசாரணைக்கு தயார் என அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Comment