ஒடிசா ரயில் விபத்து…நான் மிகவும் வேதனையடைந்தேன் ..சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இரங்கல்.!!

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர்.

விபத்து எப்படி நடந்தது அதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்துவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தனது இரங்கலை தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் ”  2 ஜூன் -ஆம் தேதி  ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்தை பற்றி நான் மிகுந்த வேதனையுடன், வருத்தத்துடனும் அறிந்தேன். சிங்கப்பூர் அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.