இந்தியா குறித்த ஒபாமாவின் கருத்துக்கும் வெள்ளை மாளிகைக்கு சம்மந்தமில்லை… அமெரிக்க மூத்த அதிகாரி.!

ஒபாமாவின் இந்தியா குறித்த கருத்துக்கும் வெள்ளைமாளிகைக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்க அதிகாரி தகவல். 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் ஜூன் 22இல் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகி அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் பிரதமரும், அதிபர் பைடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

அப்போது பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது முன்னாள் அதிபர் ஒபாமா கூறிய கருத்து சர்ச்சையில் முடிந்தது. ஒபாமா கூறும்போது, நான் பிரதமர் மோடியிடம் பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து விவாதித்திருப்பேன் என கூறினார். பைடன் இது குறித்து மோடியுடன் விவாதிக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

ஒபாமாவின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அமெரிக்க நிர்வாக மூத்த அதிகாரி, ஒபாமா அமெரிக்க நாட்டின் ஒரு தனிப்பட்ட குடிமகன் என்றும், அவர் மீது பைடன் அரசு மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், ஒபாமாவின் கருத்துக்கும் வெள்ளை மாளிகைக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.