தன்னை யாரும் கடத்தவில்லை! குஜராத் பெண் கிருத்திகா திடுக்கிடும் வாக்குமூலம்!

குஜராத் இளம்பெண் கிருத்திகாவிடம் பெறப்பட்ட ரகசிய வாக்குமூலத்தை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த போலீசார்.

குஜராத் பெண் கிருத்திகா வாக்குமூலம்:

தென்காசியில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குஜராத் இளம்பெண் கிருத்திகா போலீசில் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குஜராத் பெண் கிருத்திகா வாக்குமூலத்தில், வினித் என்பவரை 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் விருப்பப்படியே வினித்துடன் சென்றதாகவும் கூறியுள்ளார்.

வினித்தின் குடும்ப கலாச்சாரம் பிடிக்கவில்லை:

வினித்துடன்  வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கிருத்திகா வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வினித்தை திருமணம் செய்தபின் அவருடன் கோவா சென்று 3 நாட்கள் தங்கியிருந்தோம். வினித்தின் குடும்ப கலாச்சாரம் பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுளார். வினிதின் தந்தை மாந்திரீக செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார்.

மைத்ரிக் படேல் என்பவருடன் திருமணம்:

வினித்தை காதலித்ததால் தனது பெற்றோர் குஜராத் அலைய்த்து சென்று மைத்ரிக் படேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மீண்டும் தென்காசி வந்தபிறகு வினித்துடன் நட்பை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். வழக்கறிஞர் உதவியுடன் கடந்த டிசம்பர் 7ம் தேதி வினித்தை திருமணம் செய்து கொண்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

உண்மையை மறைத்த பெற்றோர்:

நான் காணாமல் போனதாக தாய் அளித்த புகார் காரணமாக குற்றாலம் காவல் நிலையத்தில் வினித்துடன் வந்து ஆஜரானதாகவும், ஏற்கனவே எனக்கு திருமணம் நடந்த விவகாரத்தை காவல் நிலையத்தில் கூறாமல் பெற்றோர் மறுத்துவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். பின்னர் வினித் வீட்டில் இருந்தபோது அவர்களது கலாச்சாரம் பிடிக்காததால் அங்கிருந்து அழைத்து செல்லும்படி மைத்ரிக் படேலிடம் கூறினேன் எனவும் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

மீண்டும் குஜராத் சென்ற கிருத்திகா:

நான் கேட்டுக்கொண்டதால் குற்றாலம் காவல் நிலையத்துக்கு சென்று வந்தபோது என்னை எனது பெற்றோர், மைத்ரிக் படேல் அழைத்து சென்றனர். பெற்றோருடன் சேர்ந்து கேரளா, கர்நாடகா சென்று அங்கிருந்து குஜராத் சென்றதாகவும் கிருத்திகா கூறியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் மைத்ரிக் உடன் நடந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது. கிருத்திகாவிடம் பெறப்பட்ட ரகசிய வாக்குமூலத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இரண்டு திருமணம் நடந்தது உண்மை:

இதில், குஜராத் பெண்ணுக்கு இரண்டு திருமணம் நடந்தது உண்மை என தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்,, அவர் விருப்படியே தான் நடந்துள்ளது எனவும் தெளிவாகிறது. தற்போது குஜராத் இளம்பெண் கிருத்திகாவை யாருடன் அனுப்புவது குறித்து நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கிருத்திகாவின் காதல் கணவரான தென்காசியை சேர்ந்த வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இளம்பெண் கடத்தல் :

தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் வினித் என்பவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை அடுத்து கடந்த 25ம் தேதி வினீத் வீட்டிற்கு ஒரு கும்பல் வந்து கிருத்திகாவை வீடு புகுந்து கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை அடுத்து, வினித் தரப்பில் தனது மனைவி கிருத்திகாவை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனுவும், அதே போல, கிருத்திகா பெற்றோர் தரப்பில் முன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்திருந்தனர்.

நாளை உத்தரவு:

இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற போது, கடந்த 11ம் தேதி கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார். அப்போது, கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுத்து விரிவான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கிருத்திகாவிடம் பெறப்பட்ட ரகசிய வாக்குமூலத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீசார் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான உத்தரவை நாளை பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

Leave a Comment