ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து

நேற்றைய  போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக சஜாய், நூர் அலி இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இருவரும் வந்தனர்.
பிறகு அதிரடியாக விளையாட அணியின் எண்ணிக்கை 10 ஓவரில் 60 ஆக உயர்ந்தது. பின்னர் 11 -வது ஓவரில் சஜாய் 34 ரன்னில் வெளியேற அடுத்த இரண்டு பந்தில் நூர் அலி 31 வெளியேறினார்.

பிறகு களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹீதி நிதானமாக விளையாடி வந்தார்.ரஹ்மத் 0 ரன்னில் வெளியேற அடுத்தடுத்தது வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்துஅணி பந்து வீச்சில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டையும் , லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 173 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில், கொலின் மன்ரோ களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே மார்டின் குப்டில் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் , கொலின் மன்ரோ இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறிது நேரத்திலே கொலின் மன்ரோ 22 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக இறங்கிய ராஸ் டெய்லர் 48 குவிந்து வெளியேறினார்.கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேன் வில்லியம்சன் 79 ரன்கள் குவித்தார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.