தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, வரும் 30ஆம் தேதி நாளை ஓய்வு பெற உள்ளார். அதனால், தமிழகத்தில் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். அடுத்த தலைமை செயலாளர் பட்டியலில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிவதாஸ் மீனா கவனிக்கும் நகராட்சி நிர்வாக செயலர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக உள்ள தாரேஸ் அகமது மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், பொதுத்துறை செயலாளராக நந்தகுமாரும், டிஎன்பிஎஸ்சி தலைவராக டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.