வீட்டு வேலை செய்யச்சொல்வது மாமியார் கொடுமை அல்ல; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

மருமகள் வீட்டுவேலைகளில் சரியாக இருக்க வேண்டும், என்று மாமியார் கூறுவது கொடுமை அல்ல என ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு:                                                                                          இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 498A-ன் கீழ், மாமியார் தனது மருமகளிடம் வீட்டு வேலைகளைச் செய்வதில் சரியாக இருக்க வேண்டும் என்று கூறுவது மாமியார் கொடுமையாகாது என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

மேல்முறையீடு:                                                                                                    2008 ஏப்ரலில் திருமணம் ஆகி, 8 மாதங்களிலேயே மருமகள் இறந்த வழக்கில் மருமகளின் மரணம், வரதட்சணைக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது மகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆந்திரப் பிரதேச நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில், கணவரும் அவரது தாயும் இறந்த பெண்ணை வீட்டு வேலையில் சரியாக இருக்கவேண்டும் என்று கொடுமைக்கு உள்ளாக்கினர் என்ற வாதத்தை ஒற்றை நீதிபதி டாக்டர் வி.ஆர்.கே.கிருபா சாகர், நிராகரித்தார். வீட்டு வேலை தொடர்பாக ஒரு பாராட்டு வார்த்தை அல்லது சரியாக செய்யவேண்டும் என கருத்து சொல்வது எந்த வீட்டிலும் பொதுவானது.

துன்புறுத்தல் அல்ல:                                                                                    திருமணமான பெண்மணிக்கு, வீட்டு வேலைகளைச் செய்வதில் அதிக பரிபூரணம் தேவை என்று அவளது மாமியார் கூறுவது குடும்ப உறுப்பினர்களிடையே கொடுமை அல்லது துன்புறுத்தல் என்று ஒருபோதும் கூற முடியாது என நீதிபதி கூறினார். மேலும் புகார்தாரர் கூறும்போது, தங்கள் மகளின் திருமணத்தை, அவளின் மாமியார் மற்ற மகன்களின் திருமண நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை:                                                                                திருமண கொண்டாட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அல்லது புதிதாக திருமணமான பெண்ணிடம் வீட்டு வேலைகளில் அதிக திறமையுடன் கலந்துகொள்வதன் அவசியத்தைப் பற்றி பெரியவர்கள் கூறுவது, வரதட்சணை கொடுமையின் கீழ் வராது என்று நீதிமன்றம் கூறியது.

குற்றம் சாட்டப்பட்ட தாய் மற்றும் கணவர் எவரும் இறந்த பெண்ணை,  வீட்டை விட்டு அனுப்பியதாகவோ அல்லது இறந்தவர் திருமண வீட்டை விட்டு விரைந்து சென்று அவரது தாய் மற்றும் சகோதரரிடம் தனக்கு பிரச்சனை இருப்பதாக புகார் கூறியதாக ஒரு சம்பவமும் இல்லை என்றும், திருமண வீட்டின் அண்டை வீட்டினரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சந்தேகப்படும்படி எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

இது அவள் நடத்தி வந்த ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை என்பதை இது குறிக்கிறது. சாதாரண குடும்ப வாழ்க்கை அதன் வாழ்வில் துன்பங்களையும் இன்பங்களையும் கொண்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. வரதட்சணை மரணம் குற்றச்சாட்டின் கீழ், மேல்முறையீடு செய்தவர்களை தண்டிக்க காரணம் குறைவாக இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

Leave a Comment