மீனாட்சி திருக்கல்யாணம் 2024.! தீர்க்க சுமங்கலி வரம் தரும் மீனாட்சியம்மன்.!

மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் ஒரு முக்கிய நாள் திருக்கல்யாணம் தான்.

திருக்கல்யாணம் நடைபெறும் நேரம்

திக் விஜயம் முடிந்த மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும்.

இந்த திருக்கல்யாணம் கோவிலின் வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 21, 2024 சித்திரை எட்டாம் நாள் காலை  8.35  மணிக்கு மேல் 8. 59 மணிக்குள்  ரிஷப லக்னத்தில் நடைபெறும்.

இந்நிகழ்வில் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நிகழ்வை பார்வையிட வந்த பக்தர்கள் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வது வழக்கம். நேரில் வர முடியாதவர்கள் அந்த நேரத்தை அறிந்து கொண்டு வீட்டிலேயே மாற்றிக் கொள்வார்கள்.

திருமாங்கல்யம் மாற்றும் முறை

அம்மா, பட்டாபிஷேகம் முடிந்து செங்கோல் ஏந்தி திக் விஜயம் செய்து திருமாங்கல்யம் வாங்கி கொள்கிறார். இந்த மகிழ்ச்சிகரமான நாளில் மாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் போது மீனாட்சி சுந்தரேஸ்வரரை போல மகிழ்ச்சியான இல்லற வாழ்வை பெற்று தீர்க்க சுமங்கலி வரத்தையும் பெறுவார்கள் என ஐதீகம்.

மாங்கல்யம் மாற்றிக் கொள்பவர்கள் முன்கூட்டியே புது மாங்கல்யத்தை தயார் நிலையில் வைத்துக்கொண்டு ,பிறகு அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் போது நீங்கள் உங்கள் பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பு நின்று மாற்றிக் கொள்ளலாம். அல்லது உங்கள் ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு அங்கும் மாற்றிக் கொள்ளலாம்.