மணிப்பூர் வன்முறை: கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மொதலானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் சிக்கி, இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருக்கையில், அங்கு மீண்டும் வெடித்த கலவரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

விஷ்ணுபூர் மாநிலத்தின் கவாட்கா கிராமத்தில் தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.  அதற்கு அருகே உள்ள கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமை குடைந்தபாடு இல்லை.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், கூடுதலாக 10 மத்திய ஆயுதப் படைகள் (CAF) நேற்று அங்கு வந்தடைந்தனர். இதனிடையே மணிப்பூரின் குட்ரூக் மலைத்தொடரில் 7 சட்டவிரோத பதுங்கு குழிகளை பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர்.